உஷார்... இன்றும் நாளையும் கடல் கொந்தளிப்பு... இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!

 
சுனாமி
 

இன்றும் நாளையும் கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்படலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சில நேரங்களில் திடீரென எந்தக் குறிப்பும் அல்லது எச்சரிக்கையும் இன்றி ஏற்படும் பலத்த காற்று வீசலாம். இதனை தென்பகுதிகளில்  "கல்லக்கடல்" என அழைக்கின்றனர்.  

தனுஷ்கோடி கடல் கொந்தளிப்பு அலை
இந்நிகழ்வு இன்றும், நாளையும் ஏற்பட வாய்புள்ளதால் தமிழ்நாட்டில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலை சீற்றம் அதிகரிக்கலாம்.  கடல் கொந்தளிப்பு காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

கடல் சீற்றம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு  மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்  விடுக்கப்பட்டுள்ளது.   விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்  விடுக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பு, கடல் அலை சீற்றம் காரணமாக படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும்படியும், கடலோரப் பகுதியில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web