ரூ.1கோடி ஊக்கத்தொகை... ஊராட்சி விருதுகள் பெற விண்ணப்பிக்க ஜூலை 14 கடைசி தேதி!

 
ஸ்டாலின் தமிழக அரசு

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

கிராம சபை கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் ஊக்கத் தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும். உரிய செயல்திறன் அளவீடுகள் மற்றும் நல்லிணக்க தரவுகள் மூலம் இந்த ஊராட்சிகள் தேர்வுச் செய்யப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கிராம சபை கூட்டம்

அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகள் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுகள் பெற உரிய படிவத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று ஜூலை-14-க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?