அம்...மாடியோவ்... வாரம் 42 மணி நேர வேலைக்கு ஆண்டுக்கு ரூ 1.5 கோடி சம்பளம்!

மேற்கு கடற்கரையில் உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா என்ற இரண்டு தீவுகள் அமைந்துள்ளது. அந்த தீவுகளில் தற்போதைய நிலவரப்படி வெறும் 40 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். இந்நிலையில் கோடைகாலத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம் இருக்கும். அந்த இடத்தில் வேலைக்கு ஆள் சேர்க்கும் திட்டத்தில் வெஸ்டர்ன் ஐல்ஸ் நடத்திய ஆள் சேர்க்கை குழுவானது மருத்துவத்திற்கு வருடத்திற்கு ரூ1.5 கோடி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதில் இடமாற்ற உதவித்தொகையாக 8 லட்சமும், பணிக்கொடையாக 1.3 லட்சமும், அலவேன்ஸ் 11 லட்சமும் தனித்தனியாக வழங்கப்படும். அதன்படி மொத்தமாக ஒரு மருத்துவருக்கு வருடத்திற்கு ரூ1.5 கோடி சம்பளம் வழங்கப்படும். இந்த மருத்துவர் வாரத்திற்கு 42 மணி நேரம் மட்டுமே வேலை செய்தால் போதும் என தெரிவித்துள்ளது. அத்துடன் பணியாளர்களுக்கு உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!