இந்து அமைப்பின் தலைவரை கொல்ல 1 கோடி கைமாற்றம்.. விசாரணையில் பெரும் அதிர்ச்சி!

 
மௌலவி

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள இந்து சனாதன் சங்கத்தின் தேசியத் தலைவர் உபதேஷ் ராணா. இவரை கொல்ல பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க திட்டமிட்டதாகவும், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்துடன் சேர்ந்து அவரை கொல்ல 1 கோடி ரூபாய் கொடுக்க திட்டமிட்டதாகவும் குஜராத்தை சேர்ந்த மௌலவி சோஹல் அபுபக்கர் டிமோல் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மௌலவி சோஹல் அபுபக்கர் டிமோல், சுதர்சன் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியரும், பாஜகவின் தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினருமான ராஜா சிங் மற்றும் அக்கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா ஆகியோரை மிரட்டியதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது சம்பந்தமாக, சூரத் போலீஸ் கமிஷனர் அனுபம் சிங் கெலாட் கைது செய்யப்பட்ட குற்றவாளி மௌலவி சோஹல் அபுபக்கர் டிமோல் என்று அடையாளம் காட்டினார். சோஹல் அபுபக்கர் ஜவுளித் தொழிற்சாலையில் மேலாளராகப் பணியாற்றி முஸ்லிம் குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்து வந்தார். விசாரணையில் அவர் பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தை சேர்ந்தவர்களுடன் சேர்ந்து இந்து சனாதன் சங்க தலைவர் உபதேஷ் ராணாவை ரூ.1 கோடி கொடுத்து கொல்ல முயன்றது தெரியவந்தது. இதற்காக பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதம் வாங்க முயன்றது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, சூரத் போலீஸ் கமிஷனர் அனுபம் சிங் கெலாட் கூறுகையில், ""மௌலவி சோஹல் அபுபக்கர் திமோல் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர், அவரது செல்போனை சோதனையிட்டபோது, அதில் ஆட்சேபகரமான விவரங்கள் கிடைத்தன. குறிப்பாக, அவர் ரூ.1 கோடி கொடுத்தபோது, உபதேஷ் ராணா கொலைக்கு, அவர் பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கைது

குற்றப்பிரிவு அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்டவரின் முதற்கட்ட விசாரணையில், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திலிருந்து தொலைபேசி எண்களைக் கொண்ட டோகர் மற்றும் ஷெஹ்னாஸ் என அடையாளம் காணப்பட்ட இரண்டு நபர்கள் அவரை அணுகினர். ரூ.1 கோடி கொடுத்து இந்து அமைப்பின் தலைவரை மௌலவி கொல்ல முயன்ற சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web