உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற 1 கோடி ரூபாய் பறிமுதல்.. தீவிர விசாரணையில் போலீசார்!

 
 ஹாஜா - தனசேகர்

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பணம் கொண்டு வந்த இருவரிடம் காவல்நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று  இரவு (மே 13) சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் ரோந்து வாகனத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

பணம் பறிமுதல்

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை  நிறுத்தி சோதனை செய்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கொண்டு சென்ற பையில் பணம் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஹாஜா (23), தனசேகர் (43) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணையில் அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள பணப்பரிவர்த்தனை நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும், அங்கு தான் இந்த பணத்தை எடுத்து செல்வதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த போலீசார், பணத்தை வருமான வரித்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து கொத்தவால்சாவடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web