ரூ.10 லட்சம் லஞ்சம்.. கைதான துணை வட்டாட்சியர் எஸ்கேப்.. அதிர்ச்சியில் போலீசார்!

 
பழனியப்பன்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே வெங்கடாஜலபதி நகரில் அகிலா என்ற பெயரில் புதிய தனியார் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடத்த தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) பெற பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும்  துணை வட்டாட்சியர் பழனியப்பன் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

மகிழ்ச்சி! அரசு அலுவலகங்களில் லஞ்சம் தர தேவையில்லை!

இதையடுத்து, லஞ்சம் கொடுக்க விரும்பாத தனியார் திருமண மண்டப மேலாளர் துரைராஜ், பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரை அணுகியுள்ளார். அவர்களின் ஆலோசனையின் பேரில், நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, துணை வட்டாட்சியர் பழனியப்பனிடம்,  கேட்டபடி லஞ்சப் பணத்தை கொடுக்க துரைராஜ் வந்ததாகக் கூறினார்.

 கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமியிடம் அந்த பணத்தை வாங்கி வரும்படி பழனியப்பன் கூறியதாக கூறப்படுகிறது. அதன்படி, நல்லுசாமி, துரைராஜிடம், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை வாங்கும் போது, ​​தலைமறைவான லஞ்ச ஒழிப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஹேமசித்ரா தலைமையிலான, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மாவட்ட துணை வட்டாட்சியர் பழனியப்பன், கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமியை கையும் களவுமாக கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மாவட்ட துணை வட்டாட்சியர் பழனியப்பன் நேற்று இரவு நெஞ்சுவலி காரணமாக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாவட்ட துணை வட்டாட்சியர் பழனியப்பன் இன்று அங்கிருந்து தப்பியோடினார். தலைமறைவான மாவட்ட துணை வட்டாட்சியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web