காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை அறிவிப்பு!

 
ஜம்மு
 ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆன்மிக சுற்றுலா சென்றுக் கொண்டிருந்த பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல்  நிகழ்த்தியதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள பிரபல சிவகோடி குகைக் கோவிலுக்குச் செல்வதற்காக பேருந்து ஒன்றில் பக்தர்கள் ஆன்மிக சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். பேருந்து ரியாசி மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web