பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம்.. நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல் அதிரடியாக கைது!
பெண்களை கர்ப்பமாக்கினால் பணம் தருவதாகக் கூறி ஒரு புதிய மோசடி நடந்துள்ளது. பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள கஹுவாரா கிராமத்தில் இரந்த புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பீகாரைச் சேர்ந்த பிரின்ஸ் ராஜ், போலா குமார் மற்றும் ராகுல் குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் போது, அந்த கும்பல் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் 'All India Pregnant Job Service' என்ற குழுவை உருவாக்கி வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை வெளியிட்டது. அந்த விளம்பரத்தில், குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால், அவர்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்றும், அந்தப் பெண் கர்ப்பமாகவில்லை என்றால், ரூ. 50,000 முதல் ரூ. 5 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் விளம்பரப்படுத்தியுள்ளனர்.
இதை நம்பிய பலர் இது குறித்து தகவல் பெற இந்த கும்பலைத் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் பேசியவர்களிடம் பணம் பறித்துள்ளனர். மேலும், பேசியவர்களிடம் பான் கார்டு, ஆதார் கார்டு, புகைப்படம் போன்றவற்றை கேட்டுள்ளனர், மேலும் முன்பதிவு கட்டணம் மற்றும் ஹோட்டல் அறை கட்டணத்தையும் கேட்டுள்ளனர். செல்ஃபி அனுப்பிய ஆண்களையும் அவர்கள் மிரட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!