திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.32 கோடி!

 
 திருத்தணி முருகர்  திருத்தணி முருகர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 27 நாட்களில் கிடைத்த உண்டியல் காணிக்கையின் எண்ணிக்கை பணி நேற்று நிறைவு பெற்றது. இதில் மொத்தம் ரூ.1 கோடியே 32 லட்சத்து 33 ஆயிரத்து 116 காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முருகப்பெருமானின் ஐந்தாவது படைவீடாக போற்றப்படும் இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் சாமி தரிசனத்திற்குப் பிறகு உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

உண்டியல்

அறநிலையத்துறை அனுமதியுடன், இணை கமிஷனர் ரமணி தலைமையில், அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து உண்டியல் எண்ணும் பணி மேற்கொண்டனர்.

உண்டியல் சமயபுரம்

இதில், பொதுக் காணிக்கையாக ரூ.1 கோடியே 29 லட்சத்து 75,173 மற்றும் திருப்பணி உண்டியல் வழியாக ரூ.2 லட்சத்து 57,943 என மொத்தம் ரூ.1.32 கோடி வசூலாகியுள்ளது. கூடுதலாக, 713 கிராம் தங்கமும் 8 கிலோ 459 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளன. திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களின் காணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!