ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.1.50 லட்சம்... இளம்பெண் தற்கொலை!
ஆன்லைன் மோசடியில் ரூ. 1.50 லட்சம் பணத்தை இழந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராணி (22). இவருக்கு சமீபத்தில் திருமணம் முடிவு செய்யப்பட்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் ஆன்லைன் லாட்டரியில் ராணிக்கு ரூ. 42 லட்சம் பரிசு கிடைத்துள்ளதாக செல்போனில் மெசேஜ் வந்துள்ளது. ரூ.42 லட்சம் பரிசு தொகையை பெற வேண்டுமானால் வரி தொகையாக ரூ.1.50 லட்சம் முன்பணம் செலுத்த வேண்டும் என்று ஆன்லைன் மூலம் மெசேஜ் வந்துள்ளது.
இந்த மெசேஜை உண்மை என்று நம்பிய ராணி தனது வங்கி கணக்கில் சேமித்து வைத்திருந்த பணம், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று கடன் வாங்கி ரூ.1.50 லட்சம் பணத்தை மெசேஜ் வந்த லிங்கில் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் ராணிக்கு ரூ.42,000 செலுத்தியதற்கான ரசீது மெசேஜில் வந்துள்ளது.
இதையடுத்து லாட்டரி தொகையான ரூ. 42 லட்சம் வந்துவிடும் என அவர் நம்பியுள்ளார். பின்னர், ஓரிரு நாட்கள் சென்ற நிலையில் தனது வங்கி கணக்கில் லாட்டரி பரிசு தொகையான 42 லட்ச ரூபாய் வரவு வைக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ராணி, தான் ஆன்லைன் மோசடியில் ஏமாற்றப்பட்டதை உணர்த்துள்ளார்.
ஆன்லைனில் ரூ.1.50 லட்சத்தை இழந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ராணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் தற்கொலை செய்துகொண்ட ராணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!