செம... ஜூலை முதல் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ15000!

 
உதவித்தொகை

  தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் மாதம் ரூ1500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி   21 முதல் 60 வயது வரை உள்ள  தகுதியான பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை

இத்திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.46000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.  அங்கு அக்டோபர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாராஷ்டிராவின்  துணை முதல்வர்களாக தேவேந்திர பட்னவிஸ் மற்றும் அஜித் பவார்  உள்ளனர்.சட்ட சபையின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூன் 27ம் தேதி  தொடங்கி  2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் பல்வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை

அதன்படி 21 முதல் 60 வயது உள்ள தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாநில அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை. 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஆண்டுக்கு  3 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.  மின்சார கட்டணம் செலுத்தாத 44 லட்சம் விவசாயிகளின் மின் கட்டணம் தள்ளுபடி . வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web