அம்...மாடியோவ்... ஒரே நாளில் ரூ180 கோடி வருமானம்... பத்திரப்பதிவுத் துறை புதிய சாதனை!!

தமிழகத்தில் அக்டோபர் 19ம் தேதி வியாழக்கிழமை நேற்று ஒரு நாள் மட்டும் பத்திரப்பதிவுத்துறையில் ரூ 180 கோடி வருவாய் ஈட்டியதாக வணிகவரித்துறை செயலர் தகவல் தெரிவித்துள்ளார். புரட்டாசி மாதம் சுபநிகழ்வுகளை ஒத்தி வைப்பது இந்துக்களிடையே வழக்கமாக இருந்து வருகிறது இதனால் பத்திரப்பதிவு துறை கொஞ்சல் டல்லடிக்கும். நேற்றைய தினம் புரட்டாசி முடிந்து ஐப்பசி முதல் வளர்பிறை முகூர்த்தம். இதனால் கூடுதல் பத்திரப்பதிவுகள் நடத்தப்பட்டன.
இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ”அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் 18.10.2023 அன்று ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட்டு இருந்தன.
அதன்படி நேற்று மட்டும் ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டப்பட்டு பதிவுத்துறை புதிய சாதனை படைத்துள்ளது. சுபமுகூர்த்த தினமாக கருதப்படும் ஐப்பசி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று அக்டோபர் 20ம் தேதிய்யும் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்பட்டுள்ளன. அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதே போல் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!