2 மனைவி இருப்பவர்களுக்கு ரூ2 லட்சம்... காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சை பேச்சு!

 
காந்திலால் புரியா

 இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் இதுவரை 3 கட்ட  வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. 4 வது கட்ட தேர்தல் 96 தொகுதிகளில் மத்திய பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் நடைபெற உள்ளளன. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதில் காங்கிரஸ் கட்சியினரின் பேச்சு சமீபகாலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் காந்திலால் புரியா   பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாஜக

அந்த பிரச்சாரத்தில்  "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ. 1 லட்சம் செலுத்தப்படும். இது தேர்தல் வாக்குறுதி. அதேபோல, 2 மனைவிகள் வைத்திருப்போருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்" எனக் கூறியுள்ளார்.  
காந்திலால் புரியாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதையடுத்து, அவர் மீது பாஜக சார்பில் மத்திய பிரதேச மாநில செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.  பாஜக தலைவர்களும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பேசி வருகின்றனர். "தொடர்ந்து பெண்களை அவமதிக்கும் காங்கிரசுக்கு இந்த தேர்தலில் பெண்கள் பாடம் புகட்டுவார்கள்" எனக்  கூறியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web