இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ2000 அபராதம்!
இந்தியா முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வாகனங்களை ஓட்டி செல்லும் வாகன ஓட்டிகள் மிக கவனமாக சாலைகளில் செல்ல வேண்டியது அவசியம். அதிலும் இன்சூரன்ஸ் எதுவும் இல்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டுவது என்பது சட்டப்படி குற்றம்.

ஒருவர் இன்சூரன்ஸ் இல்லாமல் முதல் முறையாக போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.தவறினால் ரூ2000 அபராதம் விதிக்கப்படும். அதனால் இனி வாகனங்களில் பயணம் செய்பவர்கள் லைசன்ஸ், ஆர்சி புக்கோடு இன்சூரன்ஸ் ஆவணமும் கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
