தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் ரூ.2000 அபராதம்! தமிழக அரசு அதிரடி

 
தமிழில் பெயர் பலகை

தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கிற திருச்சி மாநகரில், உணவகத்திற்கான பெயர் பலகையில் தமிழைத் தவிர ஆங்கிலம், உருது வரை இடம்பெற்றிருக்கிறது. இது ஏதோ திருச்சியில் மட்டும் நடைபெறும் விஷயமல்ல. தமிழகத்தின் பல இடங்களிலும் இப்படி கடைகளின் பெயர் பலகையில் தமிழைத் தவிர்த்து விட்டு நிறைய பேர் வியாபாரம் செய்து வருகிறார்கள். இனி தங்களது நிறுவனத்தின் பெயர் பலகையில் தமிழில் பெயர் இல்லையெனில் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுமாறு வணிகர்களுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழில் பெயர் பலகை வைக்காத எத்தனை நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என கேள்வி எழுப்பியதுடன் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை செயலாளர் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தது.

தாமதமாக வரி செலுத்துவோருக்கு ‘செக்’ வைக்கும் தமிழக அரசு..!!

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள அறி்க்கையில், "வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திலும் தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை எனில் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். இதற்கான அரசாணை தயார்நிலையில் உள்ளது. விரைவில் அமல்படுத்தப்படும். மேலும் தற்போது உள்ள அபராத தொகை ரூ.50-ல் இருந்து ரூ.2,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவக்குழியில் பதுக்கி வைக்கப்பட்ட ஜோஸ் ஆலுக்காஸ் கடை நகைகள்..!!

இந்த நிலையில் அமைச்சர் சாமிநாதன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், உரிமம் வழங்குவது மற்றும் புதுப்பித்தலின் போது பெயர் பலகை தமிழில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆங்கிலத்தில் எழுதினாலும் தமிழ் பலகை தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web