தங்கமாக மாற்றப்படும் ரூ.2000 நோட்டுக்கள்.. களை கட்டும் நகைக்கடைகள்... ஆய்வில் அம்பலம்!

 
gold india today

சில நகை வியாபாரிகள் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு துணை போகிறார்கள், தனிநபர்களின் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை கணிசமான அளவில் குறைக்கவோ அல்லது அதிக விலைக்கு தங்கத்தை மாற்றவோ உதவுகிறார்கள் என்று கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

பணமதிப்பு நீக்கம் இல்லாத போதிலும், நான்கு மாத காலத்திற்குள் திரும்பப் பெறப்பட்ட கரன்சியை டெபாசிட் செய்வதற்கும் மாற்றுவதற்கும் விதிமுறைகள் இருந்தபோதிலும், வரி ஏய்ப்பாளர்கள் மற்றும் சட்டவிரோத பண நெட்வொர்க்குகள் முழு வீச்சில் செயல்படுகின்றன என்பது தெரியவந்திருக்கிறது.

டெல்லி சாந்தினி சவுக்கில் அமைந்துள்ள பன்சால் அண்ட் சன்ஸ் ஜூவல்லர்ஸ் ஸ்டோரின் உரிமையாளர் நரேஷ் பன்சால், ரூபாய் 1 கோடியை 2,000 ரூபாய் பில்களில் 93 லட்சத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளாக மாற்ற பரிந்துரைத்தார். "நீங்கள் நோட்டுக்களாகவோ அல்லது தங்கமாகவோ மாற்ற விரும்புகிறீர்களா?" என்று இந்தியா டுடேயின் புலனாய்வு செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

gold

"நீங்கள் நோட்டுகளை மாற்றினால் என்ன?" என்று பத்திரிக்கையாளர்கள் பதில் கேட்டதற்கு "அதுவும் ஏற்பாடு செய்யலாம். அதனால்தான் கேட்டேன்" என்று பன்சால் பதிலளித்திருக்கிறார். அப்போது அவர், ஒரு கோடி ரூபாய்க்கு 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கமிஷன் தொகையையும் தெரிவித்துள்ளார்.

"இது ஒரு கோடியை மாற்றித்தர ஏழு சதவிகிதம் கமிஷனாக தரவேண்டும் " என்று பன்சால் கோரியுள்ளார். "இது பணத்திலிருந்து பண பரிவர்த்தனை." 1 கோடி ரூபாய்க்கு ஈடாக 93 லட்சம மட்டுமே அதுவும் 500 ரூபாய் நோட்டுகளாகக் கொடுப்பதாக கூறியுள்ளார்.

இருப்பினும், கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர் அதற்குப் பதிலாக 24 காரட் தங்கத்தை விரும்பினால், பொன் வியாபாரி அதையும் பிரீமியம் விலையில் வழங்குவதாகவும் தெரிவித்திருக்கிறார். மே 22 அன்று, 10 கிராம் 24 காரட் தங்கத்தின் சந்தை விலை 61,570 ரூபாயாக இருந்த போது, ​​பன்சால் அதை 2,000 நோட்டுகளாக நீங்கள் கொடுத்தால் 67,000 ரூபாய்க்கு மாற்றித் தருவதாக கூறியிருக்கிறார். அதாவது 10 கிராமுக்கு உத்தேசமாக ரூபாய் 5,500 கூடுதலாக தர வேண்டுமாம், தன்னைப் போன்ற வர்த்தகர்கள் தற்போது 2,000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக தங்கத்தை மட்டுமே விற்பனை செய்து தங்கள் லாபத்தைப் பெருக்குகிறார்கள் என்றும் அவர் சொல்லியுள்ளார். சென்னை மட்டுமல்லாமல் மதுரை, திருச்சி, கோவை என பல மாவட்டங்களிலும் வழக்கத்தை விட நகைக்கடைகளில் அதிகளவில் விற்பனை நடைப்பெறுவதும், ரூ.2000 நோட்டுக்களாக வருவதுமே இதற்கு சான்று என்கிறார்கள்.

"தங்கமாக  மாற்றினால், உங்களுக்கு எவ்வளவு செலவாகும் என்றதற்கு ஒரு கிலோவுக்கு 67 லட்சம் ரூபாய் என்றிருக்கிறார்(10 கிராமுக்கு 67,000 ரூபாய்) பன்சால். கடந்த வாரம் இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாக அறிவித்ததில் இருந்து அவரது தங்க சப்ளையர்கள் 2,000 பில்களை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றனர் என்றும் கூறியிருக்கிறார்.

சாந்தினி சௌக்கில் உள்ள சத்யா ஜூவல்ஸ் கடையை நடத்தி வரும் நிதின் பன்சால், மே 22 அன்று நிலவும் சந்தை விலையை விட 4,000 ரூபாய்க்கும் அதிகமான விலையில் 24 காரட் தங்கத்திற்கு ரூபாய் 1 கோடியை 2,000 ரூபாய் நோட்டுகளாக மாற்ற முன்வந்திருக்கிறார். "உண்மையில், சந்தையில் இரண்டு விலைகள் உள்ளன, ஒன்று 2,000 ரூபாய் நோட்டுக்களுக்கானது மற்றொன்று 500. 2,000 ரூபாய் பில்களுக்கான கட்டணம் ரூபாய்  65,750" என்று நிதின் பன்சால் இந்தியா டுடேயின் விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளார். 

தங்கம் நகை 2000

"எங்களுக்கு எந்த KYC செயல்முறையும் தேவையில்லை, அதனால்தான் உங்களுக்கு இவ்வளவு செலவாகிறது. மற்ற நகைக்கடைக்காரர்களும் கணிசமான GSTயை விதிக்கலாம். இங்குள்ள வித்தியாசம் என்னவென்றால், நீங்கள் உங்கள் பணத்தை தங்கமாக மாற்றுகிறீர்கள். பில்லிங் எதுவும் இருக்காது." மேலும் டெல்லியில் உள்ள சாஸ்திரி நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இந்த பணப்பரிவர்த்தனை செய்ய அவர் பரிந்துரையும் செய்திருக்கிறார் .

தில்லியில் உள்ள கரோல் பாக், நகை வர்த்தகத்திற்கான மற்றொரு முக்கிய மையமான, தர்ஷன் ஜூவல்லர்ஸ் ஸ்டோரின் உரிமையாளரான பராஸ் போலா, 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு ஈடாக 24 காரட் தங்கத்தை பத்து கிராமுக்கு 67,000க்கு விற்க முன்வந்ததாகவும் தெரிவித்திருக்கிறது.

ரிசர்வ் வங்கி நோட்டு வாபஸ் அறிவிப்பை அறிவித்த நாளில் இருந்து கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் அவ்வப்போது அதை ரூபாய் 70,000க்கு வாங்கியதாக போலா கூறியிருக்கிறார். "இது 67 (ஆயிரம்/10 கிராம்) இருக்கும்" என்றும் ஆனால்  2,000 ரூபாய் நோட்டுகளுக்கு ஈடாக வழங்குவது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது "நாங்கள் அதை 70,000 க்கு விற்றோம். உண்மையில், விகிதம் குறைந்துவிட்டது." என்று கூறி அதிரவைத்திருக்கிறார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் எழுதிய ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்ற பாடல் மட்டுமே நினைவுக்கு வருகிறது. வேறு என்னத்த சொல்ல?

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web