டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ 2000 ஊதிய உயர்வு !

 
டாஸ்மாக்


 
தமிழ்நாடு முழுவதும் அரசு மதுபானக்கடைகளில் டாஸ்மாக் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களின் சம்பளம் 2,000 அதிகரித்துள்ளது.


இருப்பினும், 2024-25ம் ஆண்டில் கூடுதலாக ரூ.10க்கு மேல் வசூலித்த என்கிற குற்றச்சாட்டுகளில் சிக்கிய 451 கடைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ரூ.1,000 மட்டுமே ஊதிய உயர்வாக வழங்கப்படும். எம்.ஆர்.பி தொகைக்கு மேல் கூடுதலாக வசூலிக்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. தற்போது இந்நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மது எலைட்

இந்த உயர்வு தொகை ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ஊதியத்தில் சேர்க்கப்பட்டு, இரண்டு நாட்களுக்குள் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த சுற்றறிக்கை அனைத்து மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டு, ஊதிய உயர்வு நடைமுறையை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?