பகீர்... திருடுவதற்கு மாதச் சம்பளம் ரூ20000/-... திருட்டு நிறுவனம் நடத்திய இளைஞர்கள்!

 
திருட்டு

 இந்தியாவில் நாளுக்கு நாள் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. படித்து முடித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் படிப்படியாக ஏறி இறங்கினாலும்  பெரும்பாலானவர்களுக்கு வேலை கிடைத்தபாடில்லை. பல ஆண்டுகளாக வேலை தேடியும் கிடைக்காமல் விரக்தியில் இருப்பவர்கள்  தவறான பாதைகளில் சென்று விடுகின்றனர்.அதில் சிலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.   ஆனால் திருடுவதற்காகவே நிறுவனம் நடத்தி வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் அந்த நிறுவனம் திருடுவதற்காக மாதம் ரூ.20000 வரை  சம்பளம் கொடுத்துள்ளது.  

பைக் திருட்டு
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இந்த  தகவலின் பேரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அவர்கள், பெங்களூரு பசவேசுவராநகர்  வெங்கடேஷ், ராகவேந்திரா, வினேஷ் பட்டீல் எனத் தெரியவந்தது. இதில் வெங்கடேஷ் திருட்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளார். அங்கு ராகவேந்திரா வேலை செய்துள்ளார். இவர்கள் திருடும் பொருட்களை வினேஷ் பட்டீல் விற்பனை செய்து வந்தனர். அதன் மூலம் மாதாமாதம் சம்பளம் பிரித்து வழங்கப்படும்.  அதாவது துமகூரு மாவட்டத்தில் கேபிள் வயர்களை திருடுவது தான் வெங்கடேஷ், ராகவேந்திராவின் வேலை  . இந்த கேபிள் வயர்களை திருடுவதற்காக ராகவேந்திராவுக்கு வெங்கடேஷ் மாத சம்பளமாக ரூ.20000   கொடுத்து வந்துள்ளார்.   கொரட்டகெரே அருகே வட்டரகெரே கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கேபிள் வயர்கள் திருட்டு போனது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.  

திருட்டு நகைகள் கொள்ளை

அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் வெங்கடேஷ், ராகவேந்திரா உருவம் பதிவாகி இருந்தது. அதன்மூலம் அவர்களை போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.  அவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் கேபிள் வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் அவர்கள் 3 பேர் மீதும்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும்,  பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!