ரூ.2,438 கோடி மோசடி.. தலைமறைவாக இருந்த ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர் கைது!

 
ரூசோ

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மாதம் 25% - 30% வட்டி தருவதாக விளம்பரம் செய்யப்பட்ட நிலையில், ஆருத்ரா கோல்டு தனியார் நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.2,438 கோடி முதலீடு பெற்றதாக தெரிகிறது. இந்த நிறுவனம் அளித்த புகாரின் பேரில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆருத்ரா கோல்டு நிறுவனம்

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, ரூசோ உள்ளிட்ட நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரூசோவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், அவரை ஜாமீனில் விடுவித்தது தவறு என்றும், இதனால் அவர் வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிக்கக்கூடும் என்றும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதி ரூசோவின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த ரூசோ தலைமறைவானார்.

பின்னர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். ஆருத்ரா தங்கம் மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ரூசோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்தனர். அவருக்கு எதிராக, 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய இயக்குனர்களில் ஒருவரான ரூசோ, நீதிமன்ற உத்தரவுப்படி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!