செம மாஸ்.... கிராமங்களில் வசித்தால் ரூ25லட்சம்.... !!

இத்தாலி நாட்டில் கலப்ரியா கிராமங்களில் மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வாழ்வாதாரம் தேடி நகரங்களுக்கு சென்று விட்டனர். இதனால் இப்பகுதிகளில் கிராமத்தின் பொருளாதாரம் சரிந்து வருகிறது. இதை சமாளிக்க கலப்ரியா நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நகரங்களில் இருந்து குடிபெயர்ந்து கிராமத்தில் வசிப்பிடங்களை மாற்றி கொள்பவருக்கு ரூ25லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகையை பெற 40 வயதுக்குள் இருக்க வேண்டும்; கைவிடப்பட்ட கடைகள், சிறுதொழில்களை நடத்தவோ அல்லது புதிதாக தொடங்கவோ முன்வர வேண்டும்;
அதிலும் 90 நாட்களுக்குள் குடியேற வேண்டும் எனவும் நிபந்தனைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கலப்ரியா 'இத்தாலியின் கால்விரல்' என அழைக்கப்பட்டு வருகிறது. அதன் அழகிய கடற்கரை அழகு, பசுமையான மலைப்பகுதி, கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளுக்கு பெயர் பெற்றது என வர்ணிக்கப்படுகிறது. கலப்ரியாவில் 2021ல் 5,000க்கும் குறைவான குடியிருப்பாளர்களே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!