இறக்கும் தருவாயிலும் குழந்தைகளின் உயிரைக் காத்த மலையப்பன் குடும்பத்திற்கு ரூ5 லட்சம் ... முதல்வர் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் மலையப்பன். இவர் தனியார் பள்ளி வேர் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்றிருந்தார். பள்ளிவாகனம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மலையப்பனுக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. இருந்த போதிலும் வலியை பொறுத்துக்கொண்டு பள்ளி மாணவர்களின் உயிரை கருத்தில் கொண்டு வாகனத்தை சாலையோரம் நிறுத்தினார்.

அதன் பின் சில நொடிகளில் அவர் ஸ்டியரிங் மீது சாய்ந்து மயக்கம் அடைந்தார். பேருந்தில் இருந்த பள்ளி மாணவர்கள் கூச்சலிட்டதில் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மலையப்பனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இந்நிலையில் தன்னுயிர் பிரியும் நேரத்தில் மற்றவர்களின் உயிரை காப்பதற்காக போராடிய ஓட்டுனரின் செயல் மிகவும் வியக்கத்தக்கதாக இருக்கிறது.

அவருடைய மனிதநேயமிக்க செயலால் என்றென்றும் புகழுருவில் வாழ்வார் என முதல்வர் ஸ்டாலின் இரங்கல் பதிவு வெளியிட்டிருந்தார். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி உயிரிழந்த மலையப்பன் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
