ட்விட்டர் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் அபராதம்! நீதிபதி அதிரடி உத்தரவு!

 
ட்விட்டர்

ட்விட்டர் சமூக வலைதளத்தில், 2021-22 காலகட்டத்தில், அவதுாறான மற்றும் தவறான கருத்துக்களைப் பரப்பி வந்த 39 ட்விட்டர் கணக்குகளை நீக்குமாறு, ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, கர்நாடகா ஐகோர்ட்டில் ட்விட்டர் நிறுவனம் அப்பீல் செய்தது.

ட்விட்டர்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், தீர்ப்பை கடந்த ஏப்ரல் 21ம் தேதி ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் 'இந்திய இறையாண்மை மற்றும் பொதுநலன் கருதி, ட்விட்டர் கணக்குகளை நீக்குமாறு உத்தரவிட, மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. சம்பந்தப்பட்ட கணக்குகள் ஏன் நீக்கப்படவில்லை என்பதற்கு ட்விட்டர் நிறுவனம் தரப்பில் ஏற்கத்தக்க விளக்கம் அளிக்கப்படவில்லை. எனவே இந்த அப்பீல் மனு டிஸ்மிஸ் செய்யப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

ட்விட்டர்

இந்த தொகையை, கர்நாடகா சட்டசேவைகள் ஆணையத்தில் 45 நாட்களுக்குள் ட்விட்டர் நிறுவனம் செலுத்த வேண்டும். இந்த அபராத தொகையைச் செலுத்தத் தவறும் ஒவ்வொரு நாளுக்கும் தலா ரூ.5,000 கூடுதல் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி அதிரடியாக தீர்ப்பளித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web