சிலிண்டருக்கு ரூ 500 மானியம், பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படும்... தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய உதயநிதி!

 
சொன்ன வார்த்தையைக் காப்பாற்றிய உதயநிதி! அமைச்சராகாததற்கு இது தான் காரணமாம்!

 தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்கியுள்ளன. நாம் தமிழர் கட்சி தனித்து நின்று போட்டியிடுகிறது.

உதயநிதி

அனைத்து தேசிய கட்சிகளும் இறுதிக் கட்ட பிரச்சாரத்திற்காக தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றன. வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன.அந்த வகையில் ரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மொடக்குறிச்சி ஒத்தக்கடை பகுதியில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின்

அந்த பிரச்சாரத்தில்  “ திமுக இணைந்துள்ள இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் கேஸ் சிலிண்டர் மானியத்துடன் ரூ. 500-க்கு தரப்படும் என முதல்வர் ஸ்டாலின்  வாக்குறுதி அளித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படும் என  மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.,” என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!