ரூ5,000/- கோடி பட்ஜெட்... பிரம்...மாண்டமாக நடைபெறும் அம்பானி வீட்டு திருமணம்!
!
இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு மூன்று வாரிசுகள். மகள் இஷா அம்பானி மற்றும் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நடைபெற்று முடிந்து விட்டது. இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணமே அடுத்த தலைமுறையின் கடைசித் திருமணம் .இதனால் இந்த திருமணத்தனை அம்பானி மார்ச் மாதம் தொடங்கி அதைக் கோலாகலமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கான மதிப்பீட்டு செலவு ரூ5000 கோடி. அம்பானிகளின் சொத்து மதிப்பில் வெறும் 0.5% மட்டுமே. ஃபோர்ப்ஸ் படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2024 ல் ரூ10,18,612 கோடி.

இன்று ஜூலை 12ம் தேதி வெள்ளிக்கிழமை மும்பை பாந்த்ரா- குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் அம்பானியின் இளையமகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நடைபெறுகிறது. மற்ற சடங்குகள் ஜூலை 14 ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிகிறது. நாளை ஜூலை 13ம் தேதி சுபஆசிர்வாதம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் தெய்வ ஆசிர்வாதம் கிடைக்கும். மறுநாள் ஜூலை 14 ம் தேதி மங்கள உற்சவம் எனும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருமணத்தை முன்னிட்டு மும்பையில் போக்குவரத்துப் போலீஸார் பல்வேறு மாறுதல்களை செய்துள்ளனர். பாந்த்ரா, குர்லா பகுதிகளில் ஜூலை 12 முதல் 15 வரை ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டருக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் பிற்பகல் 1 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை குறிப்பிட்ட அளவுக்குத்தான் அனுமதி வழங்கப்படும் என போக்குவரத்துப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
