ரூ700 கோடி பட்டாசுகள் தேக்கம்... வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பட்டாசு தொழிலாளர்கள்!!

 
பட்டாசு

தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே மீதமுள்ள நிலையில் புத்தாடை பட்டாசு விற்பனைகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள், நாடு முழுவதும் சுமார் 90 விழுக்காடு பட்டாசு தேவையை  பூர்த்தி செய்கின்றன. பட்டாசு உற்பத்தி  தொழிலில் நேரடியாக 3 லட்சம் பேரும், மறைமுகமாக 5 லட்சம் பேரும்  ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு கொரோனா , நோய்த்தடுப்பு , அவசர பிரகடனம், சுற்றுச்சூழல் சீர்கேடு, காற்று மாசுபாடு என பல காரணங்களால்  பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் கடுமையாகி வருவகின்றன.

பட்டாசு உற்பத்தி மும்மூரம்! விற்பனையில் விண்ணைத் தொடும் சிவகாசி!

இதனால் பட்டாசு தொழிலாளர்களின்   வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. வழக்கமாக வடமாநிலங்களில் தீபாவளிக்கு இரு மாதங்களுக்கு முன்பே பட்டாசுகளின் தேவையை வியாபாரிகள் முன்பதிவு செய்துவிடுவர். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி முன்பதிவு தொடங்கி, ஒரு மாதத்திற்கு மேலாகியும் வடமாநில ஆர்டர்கள் எதுவும் வரவில்லை என்கின்றனர் பட்டாசு அதிபர்கள்.  குறிப்பாக தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஆலைகளில் பெருமளவு பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளன.  டெல்லியை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் பட்டாசு ஆலை விபத்தை அடுத்து இங்கும்  விற்பனை உரிமம் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பட்டாசு

கர்நாடகாவுக்கு அனுப்ப வேண்டிய பட்டாசுகளை மற்ற மாநிலங்களுக்கு குறைந்த விலைக்கு அனுப்பும் நிலை உருவாகி உள்ளதாக  வியாபாரிகள் கவலை  தெரிவித்துள்ளனர்.  டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை, கர்நாடகாவில் விற்பனை உரிமம் வழங்க மறுப்பது உட்பட பல  காரணங்களால் சிவகாசியில் கடந்த ஆண்டை காட்டிலும் 20 விழுக்காடு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
அதாவது 700 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளன.  ஏற்கனவே பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது, சரவெடி உற்பத்தி கூடாது என பல நீதிமன்ற கட்டுப்பாடுகள் . அத்துடன் இதுவும் சேர்ந்து  பட்டாசு தொழில் நலிவடைந்து வருவதாகவும்,   மாநில அரசுகளாவது தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் பட்டாசு உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web