புழக்கத்தில் இருக்கும் ரூ.7,409 கோடி ரூபாய் 2,000 நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

 
 2,000 ரூபாய் நோட்டுகள்

நவம்பர் 6, 2020 அன்று, நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து, புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு வந்தது. 500 ரூபாய் நோட்டுகள் தற்போது வரை மக்கள் மத்தியில் சாதாரண புழக்கத்தில் உள்ளது. ஆனால் ரூ.2,000 நோட்டுகளின் புழக்கம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு மே 19, 2023 அன்று, ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி வேறு நோட்டுகளாக மாற்றவோ அல்லது தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யவோ ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மக்கள் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர்.

 இந்நிலையில் தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் தகவலின்படி, இதுவரை 97.92 சதவீத ரூ.2,000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்து டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. புழக்கத்தில் இருந்த ரூ.3.56 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் ஜூலை 31, 2024 நிலவரப்படி திரும்ப பெற்றதாகவும், ரூ.7,409 கோடி இன்னும் புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web