கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுக்கள்... என்ஜினியர் வீட்டில் ரூ.80 லட்சம் பறிமுதல்!

 
பணம்
 அசாம் மாநிலம், கவுகாத்தியில் அரசு பணியில் இருந்து வரும் என்ஜினியர் ஒருவரின் வீட்டில் திடீரென நேற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுக்கள் சிக்கியது. சோதனையின் முடிவில் சுமார் ரூ.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அசாம் மாநிலம், கவுகாத்தியில் அரசு என்ஜினியர் ஒருவர் பொதுமக்களிடம் தொடர்ந்து லஞ்சம் வாங்குவதாக, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வடக்கு லக்கிம்பூர் வட்டத்தில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீரென நுழநிது ஜெயந்தா கோஸ்வாமி என்ற என்ஜினியரை கையும் களவுமாக பிடித்தனர்.

பணம்
பின்னர் ஜெயந்தா கோஸ்வாமியை அவருக்கு சொந்தமாக ஹெங்கரபாரியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.500 நோட்டுக் கட்டுகள் கத்தை கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை ட்விட்டர் பக்கத்தில், ‘கவுகாத்தியின் ஹெங்கரபாரியில் அரசு பொறியாளர் ஜெயந்தா கோஸ்வாமி வீட்டில் சோதனையிட்டபோது, ரூ.79,87,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என வீடியோவையும் பதிவிட்டு வெளியிட்டனர். 


லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் தொடர் விசாரணையில் பில் தொகைகளை வழங்குவதற்கு ஜெயந்தா கோஸ்வாமி தொடர்ந்து லஞ்சம் கேட்டதால், பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web