ரூ.853 கோடி சம்பளம்... மெட்டா நிறுவனத்தில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்!

 
மெட்டா

மெட்டா நிறுவனத்தில் அசத்தலான வேலை வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் திரபித் பன்சால். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மெட்டா நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு பிரிவில் பணிபுரிய இந்திய வம்சாவளியை சேர்ந்த திரபித் பன்சால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மெட்டாவின் அறிவிப்பின்படி, இவருக்கு ஆண்டுக்கு 100 மில்லியன் டாலர் (ரூ.853.3 கோடி) சம்பளம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்டா

இவர் ஐஐடி கான்பூரில் இரட்டைப் பட்டம் பெற்றவர். இவர் ஓபன்ஏஐ நிறுவனத்தில் பணிபுரிந்தவர். இந்திய அறிவியல் நிறுவனம், முகநூல், கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்தவர். பட்டப் படிப்பின்போதே, 2017 ம் ஆண்டிலேயே ஓபன்ஏஐ-யில் பயிற்சி பெற்றார். தொடர்ந்து, 2022 ம் ஆண்டிலேயே ஓபன்ஏஐ-யிலேயே பணிபுரியத் தொடங்கினார்.

மெட்டா நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு பிரிவை வலுப்படுத்தும் முயற்சியில் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. உலக அளவிலான பெரிய நிறுவனங்களில் மனிதர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, செயற்கை நுண்ணறிவு உதவியை நாடி வருகின்றனர். அந்த வகையில், மெட்டா நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது.

மெட்டா

ஆனால், தற்போது செயற்கை நுண்ணறிவு பிரிவில் சிறந்து விளங்குபவர்களை, தனது நிறுவனத்தில் பணிபுரிய மெட்டா அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி மெட்டா நிறுவனத்தின் புதிய சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஆய்வகத்துக்கு ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்முனைவோரைச் சேர்க்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?