ஆன்லைனில் விளையாடுவதற்கு ரூ.10 லட்சம் சம்பளம்... இந்தியர்களுக்கு மட்டுமே வாய்ப்பு! ஜூன் 11 கடைசி தேதி!

 
லேப்டாப் இளம்பெண் செக்ஸ் மூவி ஆன்லைன் ஆபாசம்

ஆன்லைனில் விளையாடுவதற்கு ரூ.10 லட்சம் சம்பளமாக அறிவித்திருக்கிறது பிரபல கேமிங் ஆஃப் நிறுவனம். இந்த வாய்ப்பு இந்தியர்களுக்கு மட்டுமே என்றும், 25 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே இதற்காக விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவித்துள்ளது. 

iQOO என்கிற நிறுவனம் எப்போதும் செல்போனில் விளையாடிக் கொண்டிருப்பவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. கேமிங்கில் அதிக ஆர்வம் கொண்ட 25 வயதுக்குட்பட்டவர்கள் தலைமை கேமிங் அலுவலராக விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு தகுதி இருந்தால், போட்டிகளில் வெற்றி பெற்றால் ஆறு மாத சம்பளமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.மொபைல் கேமிங் மற்றும் இணைய ஸ்போர்ட்ஸ் அனுபவங்களை உருவாக்க iQOO நிறுவனத்துடன் இந்த தலைமை கேமிங் அலுவலர் இணைந்து பணியாற்ற வேண்டும். 

ஆன்லைன் கேம்

சரி எப்படி விண்ணப்பம் செய்வது என கேள்வி எழுகிறதா?

iQoo CGO, 18 முதல் 25 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பை அளிக்கிறது. விண்ணப்பதாரர்கள் கேமிங்கில் அதிக ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் வசிப்பவர்களாக இருப்பதும் அவசியம்.

iQoo நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். (https://www.iqoo.com/in/activity/cgo#reg-here)

விண்ணப்ப படிவத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்யவும்.

உங்கள் தகவல்களை உறுதி செய்ய "சமர்ப்பி" என்பதை தேர்வு செய்யவும்.

25 வயதிற்குட்பட்ட கேமிங் ஆர்வலர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க iQoo ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தகுதியான நபர்கள் தங்கள் விண்ணப்பங்களை iQoo இன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக சமர்ப்பிக்கலாம்.

மே 30, 2023 அன்று முதல் இதற்கான பதிவு தொடங்கியது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 11, 2023 ஆகும்.

ஆன்லைன் கேம்

இந்த தேர்வு முறை நான்கு சுற்றுகளைக் கொண்டுள்ளது. வேறொரு நிறுவனத்தில் பணிபுரியும் நபர்கள் CGO போட்டிக்கு, பணியாற்றும் நிறுவனத்தின் அனுமதியுடன் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web