தமிழகத்தில் ஆளும் கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா?.. தமிழிசை கண்டனம்!
தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. ஆளும் கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.தமிழக சட்டப் பேரவையின் மாண்பை ஆளுநர் சீர்குலைப்பதாகவும், தமிழக முன்னேற்றத்தில் தடையாக இருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து திமுக சார்பில் மாவட்டத் தலை நகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து திமுக போராட்டத்திற்கு அனுமதி கொடுத்தது எப்படி? என முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், 'தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பது பிரிவினைவாதம் என்று சொன்னால் அதை தமிழக அரசுதான் புதிதாக கற்பிக்க முடியும். வேங்கை வயல் விவகாரம், ஆண்ட பரம்பரை என திமுக அமைச்சரே கூறியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? திமுகவினர்தான் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள்.
கடந்த 10 நாட்களில் ஆயிரக்கணக்கான தலைவர்களும் தொண்டர்களும் கைதானார்கள். எங்களுக்கு போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ஆளும் கட்சிக்கு அனுமதியா? எந்த நிலையில் அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்? நாங்கள் 5 நாள்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்? ஆனால் ஆளும் கட்சியினர் நேற்று அனுமதி பெற்று இன்று போராட்டம் நடத்துகிறார்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. தமிழகத்தில் ஜனநாயகம் இல்லவே இல்லை' என்று கூறினார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!