உக்ரைனில் குடியிருப்புகள் மீது ரஷ்யா குண்டு வீச்சு... பொதுமக்கள் 13 பேர் உயிரிழப்பு!

மேலும், 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், தாக்குதலில் ரத்த காயங்களுடன் மக்களுக்கு அவசர சிகிச்சை பிரிவினர் சிகிச்சை கொடுப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு, அதில் “ரஷ்யாவின் மனிதாபிமானமற்ற இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ரஷ்யாவின் இந்த தாக்குதலில் சாதாரண பொதுமக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா இதுக்கு உரிய பதில் சொல்லியே ஆக வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
