வலுக்கட்டாயமாக ஆட்களை சேர்க்கும் ரஷ்யா.. இலங்கையை சேர்ந்த 17 பேர் போரில் பலி!

 
ரஷ்யா

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இரு நாடுகளும் வெளிநாடுகளில் இருந்து ஆட்களை ராணுவத்தில் சேர்த்து வருகின்றன. குறிப்பாக ரஷியா அதிக சம்பளம், பாதுகாப்பு உதவியாளர் வேலை என பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்களை ராணுவத்தில் சேர்த்து வருகிறது.

இந்நிலையில் வலுக்கட்டாயமாக ஆட்களை சேர்த்து போர் பயிற்சிகளை பயிற்றுவிக்கப்பட்டு அவர்களின் விருப்பத்திற்கு மாறாக முன்வரிசைக்கு அனுப்பப்படுகிறார்கள். உக்ரைனில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இதுபோன்ற கட்டாய ராணுவ வீரர்கள் பலியாகி வருவது தொடர் கதையாக உள்ளது.

இந்நிலையில் ரஷ்யா - உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் பலியாகியுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு ரஷ்யாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web