பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, ரஷ்ய அதிபர் புதின் டிசம்பர் மாதம் இந்தியா வருகை!
ரஷ்ய அதிபர் புதின் டிசம்பர் மாதத்தில் இந்தியா வருகை தருகிறார். இந்த ஆண்டு இறுதியில் இந்தியா - ரஷ்யா உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
இந்தியா - ரஷ்யா உச்சிமாநாடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இதில் பங்கேற்குமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் வரும் டிசம்பர் மாதம் இந்தியா வர உள்ளார். இந்திய பயணத்தின் போது ரஷ்ய அதிபர் புதின் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளை, பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினும் சீனாவில் நாளை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டின் போதும் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
