ரஷ்யா - உக்ரைன் போர்.. இந்தியா அமைதி கொண்டு வரும் என அமெரிக்கா நம்பிக்கை!

 
ரஷ்யா

22-வது ஆண்டு இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்கிய பிறகு மோடியின் முதல் ரஷ்யா பயணம் இதுவாகும். ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்புறவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் மோடியின் பயணம் அமைந்துள்ளது. இதனிடையே மாஸ்கோவில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் புதின் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மோடி ரஷ்யா புடின்

உக்ரைன் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையில் தான் தீர்வு இருக்கிறது, போர்க்களத்தில் இல்லை என்று அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின. ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு, உக்ரைனில் நிலவும் மோதலை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அழுத்தம் கொடுக்கும் திறனை அளிக்கிறது என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறுகையில், உக்ரைனில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் ஆதரவு அளிப்பது முக்கியமாக கருதுகிறோம்.இதை அனைத்து நாடுகளும் உணர்ந்து கொள்வது அவசியம்.இந்தியாவின் நீண்டகால ரஷ்யாவுடனான உறவு, உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், அமைதிக்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஊக்கமளிக்கும் என அமெரிக்கா நம்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான மார்கரெட் மேக்லியோட், "இந்தியாவும் ரஷ்யாவும் சிறப்பான கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த சிறப்புக் கூட்டாண்மையைப் பயன்படுத்தி உக்ரைக்கு எதிரான போரை நிறுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம். உக்ரைனில் ரஷ்யாவின் போர் ஐ.நா. சாசனத்தை மீறுவதாக கூறினார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web