இன்று சபரிமலை கோவில் நடை திறப்பு.. அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்...!!

 
சபரிமலை

ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு , சிறப்பு பூஜை பண்டிகை நாட்களில்  மட்டும் சபரிமலை பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்படும். மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 426 பவுன் தங்க அங்கி, மறைந்த திருவிதாங்கூா் மன்னா் காணிக்கையாக வழங்கியது.

ஐயப்பன் சபரிமலை இருமுடி

ஒவ்வொரு வருடமும் திருவிதாங்கூர் மன்னர் பிறந்தநாளான ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, அந்த தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது. இந்த விழாவே சித்திரை ஆட்டத் திருவிழா. இந்நிலையில், இந்த வருட சித்திரை ஆட்டத் திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படுவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சபரிமலை

அதன்படி  நாளை நவம்பர் 11ம் தேதி சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து, ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். அதன் பிறகு இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், படி பூஜை நடைபெறும். இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web