காலையிலேயே சோகம்... புனேவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த 3 பேரும் உயிரிழப்பு!

 
காலையிலேயே சோகம்... புனேவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த 3 பேரும் உயிரிழப்பு!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இன்று காலை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 3 பேருமே பரிதாபமாக உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மும்பையில் உள்ள ஜூஹூவுக்கு ஹெலிகாப்டர்  சென்று கொண்டிருந்தபோது, ​​நகரின் குடியிருப்பு புறநகர்ப் பகுதியான பவ்தானில் உள்ள மலைப்பாங்கான நிலப்பரப்புக்கு அருகில் திடீரென விபத்துக்குள்ளானது.

இன்று காலை 7.35 மணியளவில், புனேவில் உள்ள ஆக்ஸ்போர்டு கோல்ஃப் மைதானத்தின் ஹெலிபேடில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்ட நிலையில், இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பிம்ப்ரி சின்ச்வாட் காவல்துறை இணை ஆணையர் ஷஷிகாந்த் மஹாவர்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பனிமூட்டமான வானிலை நிலவியதால் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கருதப்படுவதாகவும் தெரிவித்தார். 

டெல்லியை சேர்ந்த தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகி இருக்கிறது. 

உயிரிழந்தவர்களில் இரண்டு விமானிகள் மற்றும் ஒரு பயணி இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து சேர்ந்தன. 

காலையிலேயே சோகம்... புனேவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த 3 பேரும் உயிரிழப்பு!

இந்த விபத்து குறித்து பிம்ப்ரி சின்ச்வாட் போலீஸ் கமிஷனர் வினய் குமார் சௌபே கூறுகையில், “ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு துறை வாகனங்களுடன் எங்கள் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். விபத்து நேரிட்ட பிறகு ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்ததாக போலீசார் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. இது குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது” என்றார்.

கடந்த மாதம், மும்பையின் ஜூஹூவில் இருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​புனேவில் உள்ள பாட் கிராமம் அருகே தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!

From around the web