சோகம்.. தவறுதலாக தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி பரிதாப பலி!

 
கொலை

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (30) - தக்ஷனா தம்பதி. இவர்களுக்கு ஸ்ருதி (5), ரிஷி (7) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். கட்டிட தொழிலாளியான கிருஷ்ணன் கடந்த ஓராண்டுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னை வந்து கட்டிட வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை குழந்தைகள் இருவரும் கட்டிடத்தின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணன் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் கட்டிட வேலையில் மும்முரமாக இருந்தனர்.

இதையடுத்து வெளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஸ்ருதியை அழைக்க கிருஷ்ணன் வந்துள்ளார். சிறுமி ஸ்ருதி காணாமல் போனதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர், அருகில் உள்ள இடத்தில் தேடினார். சிறுமி எங்கும் காணப்படாததால், அவ்வழியே சென்ற ரோந்து வாகனத்தை மறித்து சிறுமியை காணவில்லை என போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியை கட்டிடம் முழுவதும் தேடியபோது தண்ணீர் தொட்டியில் சிறுமி மயங்கி கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த ஏழுகிணறு போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கட்டிட உரிமையாளர் ரூபாராம் சவுத்ரி, கட்டிட ஒப்பந்ததாரர் ஜெய்சங்கர், உதவி ஒப்பந்ததாரர் ரவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!