சோகம்.. நோய்வாய்பட்ட 65 வயது பெண் யானை.. சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு!

 
கீரதி

திருச்சி, சிறுகனூர் அருகேயுள்ள எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாமில் கடந்த 2 ஆண்டுகளாக கீரதி (65) என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானை தூத்துக்குடி பகுதியில் உரிமம் இல்லாமலும், வளர்ப்பு யானை விதிகளை மீறியும், முறையான பராமரிப்பின்றியும் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட யானைகள் பராமரிப்புக் குழுவின் பரிந்துரையின் பேரில், சென்னை முதன்மை வன உயிரினக் காப்பாளர் உத்தரவின் பேரில், திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகளுக்கு மறுவாழ்வு முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக யானையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், வன கால்நடை மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5 மணியளவில் யானை உயிரிழந்தது.

இது குறித்து திருச்சி மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து யானையை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, திருச்சி மாவட்ட வன அலுவலர், வன கால்நடை மருத்துவர்கள், திருச்சி மண்டல நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தலைமையிலான குழுவினர், யானையை பிரேதப் பரிசோதனை செய்து முகாம் வளாகத்தில் இன்று அடக்கம் செய்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web