சோகம்... கிணற்றில் தவறி விழுந்த பசு மடு.. பல மணிநேரம் போராடியும் இறந்த நிலையில் மீட்பு!

 
...

 

திருவண்ணாமலையில் கிணற்றுக்குள்  பசு மாடு ஒன்று தவறி விழுந்த நிலையில், மீட்பதற்காக பல மணி நேரம் போராடியும், இறந்த நிலையில் மீட்கப்பட்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை மாவட்டம்  மங்கலம்புதூர் கிராமத்தில் வசிக்கும் விவசாயி மனைவி சத்தியா, மூன்று மாத சினை பசுவை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றபோது  எதிர்பாராமல் அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்தது.

கிணறு அருகே ஓட்டி சென்ற பசு எதிர்பாராமல் கிணற்றில் தவறி விழுந்த நிலையில், உடனடியாக விவசாயி,  பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் விழுந்த பசுவை மீட்க போராடினர். பின்பு திருவண்ணாமலை  தீயணைப்பு துறையினருக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 


மூன்று மாத சினை பசுவை மீட்க பல மணி நேரம் போராடி, இறந்த நிலையில்  பசுவை  தீயணைப்பு துறையினர் மீட்டனர். பசு இறந்த நிலையில் மீட்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web