அதிர்ச்சி... மனைவி முன்னே கடலில் மூழ்கி கணவர் மரணம்!
விடுமுறை நாளில் பெரும் சோகமாக மனைவி கண் முன்பாகவே கடலில் மூழ்கி கணவர் உயிரிழந்துள்ளார். சென்னை பெரம்பூர் அருகே உள்ள திருவிக நகரை சேர்ந்தவர் கார்த்திக் (27). இவர் மே தின விடுமுறையையொட்டி நேற்று தனது மனைவி சசிகலா மற்றும் உறவினர்களுடன் கோவளம் கடற்கரைக்கு வந்தார். பின்னர் நீலாங்கரை கடற்கரையை சுற்றி பார்த்துவிட்டு கார்த்திக் உட்பட அனைவரும் கடலில் இறங்கி குளித்தனர்.

அப்போது, மனைவி கண்முன்னே, கோவளம் கடலில் எழுந்த ராட்சத அலையில் கார்த்திக் சிக்கி நடுக்கடலில் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கினார். இதை பார்த்த அவரது மனைவி சசிகலா மற்றும் உறவினர்கள் அலறி துடித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து மீனவர்கள் ஓடி வந்து படகை எடுத்து கடலுக்குள் சென்று தண்ணீரில் மூழ்கி மயங்கிய நிலையில் இருந்த கார்த்திக்கை மீட்டனர். பின்னர் அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கார்த்திக் மூச்சு திணறி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கேளம்பாக்கம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
