பிறந்தநாளில் சோகம்.. குடும்பத்தை சந்திக்க ஊருக்கு சென்ற கல்லூரி மாணவி பரிதாப பலி!

 
ரக்ஷிதா

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் ஒன்னஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரக்ஷிதா (வயது 16). பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி பி.காம் படித்து வந்தார். நேற்று ரக்ஷிதாவின் பிறந்தநாள். இந்நிலையில் அவர் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாட பெங்களூருவில் இருந்து காரில் புறப்பட்டார். அவர் சென்ற கார் சிக்பள்ளாப்பூர் அருகே உள்ள நந்திகிராமம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

விபத்து

அப்போது, ​​திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பணையில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரக்ஷிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் டிரைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து நந்திகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web