சோகம்.. ஓயாத அலுவலக பணி.. வேலையின் அழுத்தத்தால் ரோபோ தற்கொலை!

 
தென் கொரியா ரோபோ

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அறிவியல் வளர்ச்சியால், நாடு முழுவதும் உள்ள அலுவலகங்களில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.அந்த வகையில் தற்போது நமது உலகில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சில நிறுவனங்கள் மனித வேலைகளை ரோபோக்கள் தான் செய்கிறது. இதனால் மனித சக்தியின் பயன்பாடு குறைந்து வருகின்றன. அப்படிச் செயல்படும் ரோபோவால் மனிதர்களை விட வேகமாக வேலையை முடிக்க முடியும். இதனால், ரோபோக்கள் ஓய்வின்றி உழைத்து வருகின்றன.  இந்த வகையில், தென் கொரியாவில் உள்ள குமி நகராட்சி அரசு அலுவலகத்தில் ஊழியர்களுக்கு உதவ ரோபோ ஒன்று பயன்படுத்தப்பட்டது.

கலிபோர்னியாவில் உள்ள ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோ, அக்டோபர் 2023 இல் இந்த அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டது. தென் கொரிய அரசு ஊழியர் என்ற அடையாள அட்டையும் ரோபோவிடம் இருந்தது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை செய்யும் இந்த ரோபோ, அலுவலகத்திற்கு வரும் உள்ளூர் மக்களிடம் இருந்து தினசரி ஆவணங்களைப் பெற்று அதிகாரிகளிடம் வழங்கி வந்தது.  இந்நிலையில் ரோபோ திடீரென தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2வது மாடியில் இருந்து 1வது மாடிக்கு செல்லும் படிக்கட்டில் திடீரென விழுந்து நொறுங்கியுள்ளது. பின்னர், சேதமடைந்த பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அந்த ரோபோ அலுவலகத்தின் 2வது மாடியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுற்றிக் கொண்டிருந்ததாகவும், மிகவும் குழப்பமாக காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். உலகில் இதுவரை ரோபோக்கள் இதுபோன்று தற்கொலை செய்து கொண்டதில்லை என்பதால் இந்த விவகாரம் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகமடைந்து ரோபோவுக்கு ஆறுதல் கூறினர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web