சோகம்.. மாயமான மீனவர்.. வேதனையில் உறவினர் எடுத்த விபரீத முடிவு!

 
வேதேஸ்வரன்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டணம், நொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த அந்தோணி, ஆரோக்கியம், பழனிசாமி, விஜயராகவன் ஆகிய 4 மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்றனர். ஆழ்கடலில் காற்று அதிகமாக இருந்ததால், படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்தோணி கடலில் மூழ்கி தலைமறைவானார். அப்போது அந்த வழியாக வந்த சக மீனவர்கள் ஆரோக்கியம், பழனிசாமி, விஜயராகவன் ஆகிய 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சி!! தமிழர்களை  சிறை பிடித்த இலங்கை அரசு!! கொந்தளிக்கும் மீனவர்கள்!!

காணாமல் போன மீனவர் அந்தோணியை கடந்த 5 நாட்களாக மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் தேடியும் இதுவரை கிடைக்கவில்லை. அந்தோணிக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். அந்தோணியின் மைத்துனர் வேதேஸ்வரன் (28) கடந்த 5 நாட்களாக தனது சகோதரி மற்றும் குழந்தைகளின் நிலை குறித்து கவலையடைந்து மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று வேதேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாயமான அந்தோணியின் உடலை கண்டுபிடித்து தருமாறு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர் காணாமல் போனதையடுத்து அவரது மைத்துனர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நொண்டித்தோப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web