கோர விபத்து... டிராக்டர் மீது லாரி மோதி 10 பேர் பலி!

 
மிர்சாபூர்

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில், நேற்று நள்ளிரவில் டிராக்டர் மீது லாரி மோதி கோர விபத்திற்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

10க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்களை நேற்று நள்ளிரவு 1 மணியளவில் ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று வாரணாசியை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. 


இவர்களது டிராக்டர் கத்வா எல்லையில் உள்ள ஜி.டி., சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், டிராக்டரின் பின்புறமாக அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் டிராக்டர் நிலைகுலைந்து சுக்குநூறாய் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் டிராக்டரில் பயணித்தவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்துக் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். 

மிர்சாபூர்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பதோஹி மாவட்டத்தில் வேலையை முடித்துக் கொண்டு 10 தொழிலாளர்கள் தங்களது வீட்டிற்கு டிராக்டரில் திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் அனுபிரியா படேல் இரங்கல் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!