சோகம்.. மின்கம்பி அறுந்து விழுந்து 2 பெண்கள் பரிதாப பலி!

 
ராதிகா - செல்வி

கடந்த சில நாட்களாக திருச்சியில் 110 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், இன்று காலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. முதலில் மிதமான மழையாகத் தொடங்கி, சிறிது நேரம் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெப்பச் சலனம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வெயில்

இந்நிலையில் திருச்சி சோமரசம்பேட்டை அருகே அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சோமரசம்பேட்டை அருகே உள்ள ஏட்டு மண்டிடல் கிராமத்தில் ராதிகா, செல்வி இருவரும் தங்கள் வயலில் வாழைக்கு உரமிடும் வேலை செய்து வந்தனர்.அப்போது திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 2 பெண்களும் வயலில் இருந்து நடந்து வந்து வயலை விட்டு வெளியேற சென்றனர்.

அப்போது வயலில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதை அறியாத அவர்கள் மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சோமரசம்பேட்டை போலீசார், இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web