சோகம்... சுவர் இடிந்து விழுந்து குழந்தை உட்பட 9 பேர் பலி!

 
பச்சுப்பள்ளி

தெலங்கானா மாநிலத்தில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து குழந்தை உள்பட 9 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பச்சுப்பள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்  கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், அந்த வளாகத்திற்கு உள்ளேயே குடிசை  அமைத்து தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். 

 


அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிலும் 40 அடி உயரத்திற்கு தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. இந்நிலையில் தெலங்கானாவில் நேற்றிரவு  கனமழை பெய்த நிலையில், தடுப்புச்சுவர் அருகே மழை நீர் தேங்கியுள்ளது.  மழைநீர் வேளியே செல்ல வழி இல்லாததால், மழை நீர் வெள்ளம் போல் தடுப்புச்சுவர் அருகே தேங்கியுள்ளது.
இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட தடுப்புச்சுவர் மழைநீரில் ஊறி இடிந்து விழுந்தது. சரசரவென சரிந்த தடுப்பு சுவர், தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை மீது விழுந்ததில், குடிசைக்குள் இருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். 

 

பச்சுப்பள்ளி

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரும், தீயணைப்புப் படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு, படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் இந்த விபத்தில் இடுப்பாடுகளுக்குள்  சிக்கி 4 வயது குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web