சஹாரா குழும தலைவர் மாரடைப்பால் காலமானார்...!!

 
சஹாரா

சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய்  காலமானார். இவருக்கு வயது  75.  இவர் உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய்,   விதிகளை மீறி, ரூ. 24000   கோடி வரை முதலீடுகளை திரட்டியதாக 2014ல்  கைது செய்யப்பட்டு  திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சஹாரா

உச்சநீதிமன்ற அனுமதியுடன் பரோலில் வெளியே வந்த நிலையில் நவம்பர் 12ம் தேதி  அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக  மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சஹாரா குழும நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது

சஹாரா

சுப்ரதா ராய்   சகாரா இந்தியா பரிவார் அமைப்பின் நிறுவனராகவும்,  இந்தியப் பெரும் தொழில் குழுமத் தலைவராகவும் இருந்தவர்.   நில விற்பனை, விளையாட்டு, பொழுதுபோக்கு, செய்தித்தாள், விடுதிகள், சில்லறை வணிகம் என பல  துறைகளில் இவரது நிறுவனம்  ஈடுபட்டு வருகிறது.   ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்  என  பல உடல்நல கோளாறுகளால் நீண்ட காலம் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில்  நேற்று இரவு திடீரென மாரடைப்பால் காலமானார்.  இதனையடுத்து சுப்ரதாவின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக இன்று உத்தரப் பிரதேசத்தில் லக்னோவுக்குக் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web