சாகித்ய அகாடமி விருது பெற்ற பேராசிரியர் எம்.கே.சானு காலமானார்!
சாகித்ய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளரும் சிந்தனையாளருமான பேராசிரியர் எம்.கே.சானு காலமானார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல் நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த சானு, நேற்று மாலை 5:30 மணியளவில் காலமானார். கீழே விழுந்ததில் காயமடைந்து கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1928ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி ஆலப்புழாவின் தும்போலியில் பிறந்த இவர், நான்கு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அரசுக் கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிந்தார். 1958ம் ஆண்டில், அவர் தனது முதல் புத்தகமான 'அஞ்சு சாஸ்திர நாயகன்மார் (ஐந்து முக்கிய விஞ்ஞானிகள்)' என்ற புத்தகத்தை வெளியிட்டார். 1960ம் ஆண்டில் காட்டு வெளிச்சம் என்ற விமர்சன புத்தகத்தையும் வெளியிட்டார். 1983ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

1986ம் ஆண்டு முற்போக்கு இலக்கிய சங்கத்தின் தலைவரானார். 1987ம் ஆண்டு எர்ணாகுளம் சட்டமன்றத் தொகுதியில் இடதுசாரிகளின் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.கே.சானு விமர்சனம், குழந்தைகள் இலக்கியம் மற்றும் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வகைகளில் சுமார் நாற்பது படைப்புகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
