ரேசில் முந்தும் சஜ்ஜெய் ஆரோரா... புதிய தலைமை செயலாளர் யார்? ஜாய்ஸில் மிஷ்ராவுக்கும் வாய்ப்பு!

 
அரோரா

தமிழக தலைமைச்செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் இந்த மாதம் இறுதியில் ஒய்வு பெற உள்ளனர். இந்நிலையில் புதிய டிஜிபியை இறுதி செய்வதற்கான ஆலோசனை கூட்டம் டில்லியில் அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக புதிய டிஜிபியாக சஜ்ஜெய் ஆரோரா தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா அல்லது அதுல்ய மிஷ்ரா ஆகியேரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார். சீனியாரிட்டி அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரிகளில் சீனியராக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா உள்ளார். சீனியாரிட்டிப்படி பதவி வழங்க முதல்வர் முடிவெடுத்தால் அடுத்த தலைமைச் செயலராக இவரே நியமிக்கப்படுவார். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் பட்சத்தில் சில மாதங்களாகவே வெளிப்படையாக பேசப்பட்டு வரும் நகராட்சி நிர்வாகத்துறை செயலர் சிவ்தாஸ் மீனா புதிய தலைமைச்செயலாளராக நியமிக்கப்படலாம். இவர்கள் இருவரையும் தாண்டி விளையாட்டுத்துறை செயலர் அதுல்ய மிஷ்ராவுக்கும் வாய்ப்புகள் இருக்கு. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் கீழ் வருவதால், மிஷ்ராவுக்கு எதிர்பாப்பு எகிறுகிறது.

இறையன்பு

இவர்கள் தவிர தமிழர் ஒருவர் கூட தலைமைச் செயலாளராகலாம். காரணம், குறிப்பிட்ட ஆண்டுகள் ஐஏஸ் பணியை நிறைவு செய்த யாரையும் தலைமைச் செயலாளராக முதல்வரால் நியமிக்க முடியும். ஆனால், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சீனியாரிட்டி அடிப்படையில் மத்திய பணியாளர் தேர்வு வாரியம் பரிந்துரை செய்யும் மூவரில் ஒருவரையே நியமிக்க முடியும். இப்போதைய சீனியாரிட்டிப்படி டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, தமிழ்நாடு ஊர்க்காவல் படை டிஜிபி பி.கே.ரவி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் முதல் 3 இடத்தில் உள்ளனர். 4வது இடத்தில் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளார். இவர்கள் உட்பட டிஜிபி அந்தஸ்தில் உள்ள 8 பேர் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.

இந்த பட்டியலில் உள்ளவர்களில் மூவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் அடுத்த வாரம் டில்லியில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறை செயலர் அமுதா, பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

அரோரா

கூட்டத்தில் இறுதி செய்யப்படும் பட்டியலில் உள்ள ஒருவரே தமிழகத்தின் புதிய டிஜிபியாக வர முடியும். இப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அடுத்த டிஜிபியாக நியமிக்கப்படுவார் என்று நம்பப்படுகிறது. ஒரு வேளை சினியாரிட்டியில் உள்ள யாரையாவது மத்திய பணியாளர் தேர்வு வாரியம் ஒதுக்கும் பட்சத்தில் சஜ்ஜெய் ஆரோரா ரேசில் முந்துகிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 

From around the web