பிரதமர் , அமைச்சர்களின் சம்பளம் குறைக்க முடிவு... !

 
பிரதமர்

ஜப்பானில் நீண்ட நாட்களாக நிலவி வந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து பிரதமர் ஷிகெரு இஷிபா ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த நாட்டின் முதல் பெண் பிரதமராக 64 வயதான சனே தகைச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாரம்பரிய எண்ணங்கள் கொண்ட இவர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலேயே சிக்கன நடவடிக்கையை வலியுறுத்தி வந்தவர். பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல கட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார்.

முதற்கட்டமாக, பிரதமர் மற்றும் மந்திரிகளின் சம்பளத்தை குறைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். இதற்காக பொது ஊழியர் ஊதியச் சட்டத்தில் திருத்தம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. ஜப்பான் நாடாளுமன்றத்தில் இன்று இதற்கான விவாதம் நடைபெறுகிறது. தற்போது ஜப்பான் எம்.பி.க்கள் மாதம் 12.94 லட்சம் யென் (சுமார் ரூ.7.42 லட்சம்) பெறுகின்றனர். இதில் பிரதமருக்கு கூடுதலாக 11.52 லட்சம் யென் (ரூ.6.6 லட்சம்) மற்றும் மந்திரிகளுக்கு 4.89 லட்சம் யென் (ரூ.2.81 லட்சம்) வழங்கப்படுகிறது.

புதிய திட்டத்தின் கீழ், பிரதமர் 30% மற்றும் மந்திரிகள் 20% சம்பளத்தை திருப்பி வழங்க முடிவு செய்துள்ளனர். இதனால், பிரதமரின் சம்பளம் ரூ.2.24 லட்சம் மற்றும் மந்திரிகளின் சம்பளம் ரூ.63 ஆயிரம் வரை குறையும் என தலைமை அமைச்சரவை செயலாளர் மினோரு கிஹாரா தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன; ஆனால் ஆளும் கட்சியிலேயே சில எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!